×

வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை தலைமை அதிகாரியாக கோவேந்தனுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தனுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. கோவேந்தன் கடந்த 2009ம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி ஆவார். 2011-2021ம் ஆண்டு காலகட்டத்தில் போர்ச்சுகல், பிரேசில் மற்றும் பூடானில் உள்ள இந்தியத் தூதரகங்களில் அவர் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் 2021, ஜூலை 27ம் முதல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது பணி சிறப்பாக இருப்பதால் தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. வெளியுறவு அமைச்சகக் கிளைச் செயலகத்தின் முந்தைய தலைவர் டாக்டர் எம். வெங்கடாசலம் (ஐ.எஃப்.எஸ்), இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள இந்தியத் துணைத் தூதராக நியமிக்கப்பட்டு அந்தப் பணிக்கு சென்றதையடுத்து இந்தப் பொறுப்பில் கோவேந்தன் நியமிக்கப்பட்டார். இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வெளியுறவு அமைச்சகத்தின் சென்னை கிளை தலைமை அதிகாரியாக கோவேந்தனுக்கு கூடுதல் பொறுப்பு appeared first on Dinakaran.

Tags : Govetan ,Chief Officer ,Chennai Branch ,Ministry of Foreign Affairs ,Chennai ,Officer ,Goventan ,Chennai Branch Secretariat ,Goventhan ,Indian Foreign Service ,IOM ,F. S ,
× RELATED தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி...